ரயில் மேம்பாலம் அமைத்து தரக் கோரி அரக்கோணத்தில் அதிமுக ஆர்ப்பாட்டம்!!
ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் நகரின் மையப் பகுதியில் அரக்கோணம் ரயில் நிலையம் அமைந்துள்ளது. இந்த ரயில் நிலையத்தின் கீழே இரட்டை கண் பாலமும் அமைந்துள்ளது. இது இந்த நகரின் இரு பகுதிகளை இணைக்கும் முக்கிய பாலமாகும் இதனால் இங்கு போக்குவரத்து நெரிச்சல் ஏற்பட்டு மக்களை பெரும் துன்பத்திற்கு தள்ளப்பட்டு வந்தனர். இந்நிலையில் பாலம் அகலப்படுத்தவும் அல்லது மேம்பாலம் அமைத்து தரக்கோரியும் அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் எஸ்.ஆர். கேட் அருகில் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு நகர செயலாளர். பாண்டுரங்கன் தலைமை தாங்கினார். மாநில மருத்துவர் அணி இணை செயலாளர் டாக்டர். பன்னீர்செல்வம், மாவட்ட அவைத்தலைவர். சம்பத் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக மாவட்ட செயலாளரும், அரக்கோணம் சட்டமன்ற உறுப்பினருமான சு.ரவி MLA அவர்கள் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார். கூட்டத்தில் மாவட்ட இணை செயலாளர். மீனா, வர்த்தக அணி செயலாளர். தேவன், மீனவர் அணி. செல்வம், எம்ஜிஆர் இளைஞர் அணி பாலு, மாவட்ட மாணவரனி செயலாளர். பிரபு மாவட்ட தகவல் தொடர்பு தலைவர் ஹரிகரண், வழக்கறிஞர்கள் இலுப்பைத் தண்டலம் மனோகர், அரக்கோணம் பத்மநாபன், ஆறுமுகம், நெமிலி ஒன்றிய செயலாளர். ஏ. ஜி. விஜயன், துணைச் செயலாளர். புருஷோத்தமன், ஒன்றிய இளைஞரணி செயலாளர் வழக்கறிஞர். பிரகதீஸ்வரன், பேரவை செயலாளர். சங்கர், முருங்கை. சசிகுமார், நெமிலி நகர நிர்வாகிகள். செல்வம், நெமிலி நகர பொருளாளர். நவநீதகிருஷ்ணன், நெமிலி ஒன்றிய மாணவரணி செயலாளர். முருகன் அரக்கோணம் ஒன்றிய இலக்கிய அணி செயலாளர். கே. ஆர். சீனிவாசன் பேரலை செயலாளர். அமுல்ராஜ், அரக்கோணம் ஒன்றிய மீனவர் அணி.ஜான் விக்டர், பால்ராஜ், தக்கோாலம் சுதாகர், அரக்கோணம் எம். எஸ். கோபி, எஸ்டி.ராஜேஷ், கிருஷ்ணகுமார், தம்பி முருகேசன், சோமசுந்தரம், இளைஞரணி .ராம்குமார், கே பி சரவணன், பிரகாஷ் உட்பட மகளிர் அணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். நகரமன்ற உறுப்பினர் பாபு நன்றி கூறினார்.
அரக்கோணம் செய்தியாளர் ரவி.

கருத்துகள்
கருத்துரையிடுக