சோளிங்கர்: மலையனூர் கிராமத்தில் சாலை வசதி, மின்விளக்கு வேண்டி கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்!


ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அடுத்த காற்றம்பாக்கம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட மலையனூர் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் 300-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்திற்கு செல்லும் சாலை ஏரி கரையின் மீது செல்வதால் கரையின் மீது அதிகமான மரங்கள், செடிகள், முழு புதர்கள் இருப்பதினால் பாம்புகள் நடமாட்டம் அதிகம் உள்ளது. 

இதனால் இரவு நேரங்களில் பெண்கள், குழந்தைகள், நடந்து செல்பவர்கள் அச்சத்துடன் செல்கிறார்கள். மேலும் இரவு நேரங்களில் பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் செல்ல பயப்படுகிறார்கள். இந்த சாலை ஐந்து வருடத்திற்கு முன்பாக ஜல்லி சாலையாக அமைக்கப்பட்டு இருக்கிறது. இந்த சாலையில் அமைக்கப்பட்ட ஜல்லியும் பெயர்ந்து கொண்டு இருப்பதினால் சைக்கிள், டூவீலர், ஆட்டோ போன்ற வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது. 

கர்ப்பிணிகள், நோயாளிகளை அழைத்துச் செல்ல முடியாத நிலையும், பள்ளி குழந்தைகள் நடந்து அல்லது மிதிவண்டியில் செல்ல முடியாத நிலையும் ஏற்படுகிறது. அடிக்கடி பள்ளி குழந்தைகள் சைக்கிளில் இருந்து தவறி விழுந்து ஏரியில் விழுந்து விடுவதாகும் அப்பகுதி மக்கள் தகவல் தெரிவிக்கிறார்கள். கர்ப்பிணிகள், நோயாளிகளை ஏற்றிச் செல்ல சாலை சரியில்லை என்பதினால் ஆட்டோ எடுத்து வர மறுக்கிறார்கள். இதனால் காற்றம்பாக்கம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட மலையனூர் கிராமத்தைச் சார்ந்த பொதுமக்கள் காற்றம்பாக்கம் சாலையில் நின்று போராட்டம் நடத்தினார்கள். 

இது குறித்து மாவட்ட ஆட்சியரிடமும், வட்டார வளர்ச்சி அலுவலகத்திலும் மனுக்கள் தரப்பட்டதாகவும் தெரிவித்தனர். இதில் ஏரிக்கரையின் மீது மின்விளக்கு அமைக்க வேண்டும் என்றும், எங்கள் கிராமத்துக்கு செல்லும் சாலை தார் சாலையாக அமைத்த தர வேண்டும் என்றும் கோரிக்கை வைத்து ஆர்ப்பாட்டம் செய்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

ராணிப்பேட்டை செய்தியாளர் சிவகுமார் 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!