மாநில அந்தஸ்து கிடைக்காததால் புதுச்சேரி மாநிலம் பின்தங்கியுள்ளது எஸ். ஜெகத்ரட்கசன் எம்.பி.வேதனை !!
புதுச்சேரி மாநிலத்தில் உடன்பிறப்பே வா எனும் பரப்புரையுடன் 5 இடங்களில் முகாமை தொடங்கி வைத்துள்ளோம். ஓரணியில் புதுச்சேரி என்பதே எங்கள் தாரக மந்திரம். புதுச்சேரி எப்போதும் திமுகவின் கோட்டை. வலிமையான, வளமான புதுச்சேரியை உருவாக்கும் வகையில் திமுகவின் கோட்டையை வலுப்படுத்த உறுப்பினர் சேர்க்கை நடத்தப்படுகிறது. ஒரு மாதம் இந்த பணி நடத்தப்பட உள்ளது.
புதுச்சேரியில் திமுகவுக்கு மிகப்பெரும் வரவேற்பு உள்ளது. நான் கழக தலைவரின் துாதுவனாக வந்துள்ளேன்.
புதுச்சேரியில் நாங்கள் தான் பெரிய கட்சி என யாரும் கூற முடியாது. அதை சொல்லும் தகுதி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்குத்தான் உள்ளது. புதுச்சேரியில் நடைபெறும் ஆட்சியில் மக்கள் எவ்வளவு துன்பப்படுகிறார்கள்? புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கூட பெற முடியவில்லையே? மாநில அந்தஸ்து அளித்தால் நாங்கள்கூட ஆதரவு தருகிறோம். நாங்கள் எத்தனை ஆண்டாக மாநில அந்தஸ்து கேட்கிறோம். எவ்வளவு பின்தங்கியுள்ளோம்? கோவாவுக்கு பல ஆயிரம் கோடி அள்ளித்தரப்படுகிறது.
ஒரு தொழிற்சாலைகூட புதுச்சேரிக்கு வரவில்லை. தமிழகத்தில் ஒரு நாளைக்கு ஒரு தொழிற்சாலையை முதல்வர் ஸ்டாலின் கொண்டு வருகிறார். பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து செயல்படுத்துகிறார். ஆனால் புதுச்சேரியில் ஒரு திட்டமும் செயல்படுத்த வில்லை என்பதே வருத்தமாக உள்ளது. திமுக ஆட்சிக்கு வந்து சுமார் 30 ஆண்டாகிவிட்டது. காங்கிரஸ் ஆட்சியிலிருந்து பல ஆண்டாகிவிட்டது. காங்கிரஸ், திமுக தனித்தனியே போராட்டம் நடத்துவது வாடிக்கையானது. அந்தந்த கட்சிகள் தேவைக்கேற்ப போராட்டங்கள் நடத்தும். சேர்ந்து நடத்த தேவையானபோது சேர்ந்து போராட்டம் நடத்துவோம். இவ்வாறு அவர் கூறினார்.
புதுச்சேரி மாநில செய்தியாளர் குமரவேல்.

கருத்துகள்
கருத்துரையிடுக