ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட விசிக சார்பில் ராஜேஷ் கிஷோரை கைது செய்ய கோரி கண்ட ஆர்ப்பாட்டம்!!
ராணிப்பேட்டைமாவட்டம்,இராணிப்பேட்டை மேற்கு மாவட்டம் சார்பில் ராகேஷ் கிஷோரை கைது செய்யக்கோரி கண்டித்து ஆற்காடு அம்பேத்கர் சிலை அருகே கண்டன ஆர்ப்பாட்டம் மேற்கு மாவட்டச் செயலாளர் பிரபாகரன் தலைமையில் நடைபெற்றது
சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் அவர்களின் மீது சாதிய வன்மத்தோடு,சனாதன வெறியோடு,காலணி வீச முயன்ற வக்கீல் ராகேஷ் கிஷோரை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யக்கோரியும்! நமது எழுச்சித்தமிழர் அவர்களுக்கு "இசட் பிளஸ்" பிரிவு பாதுகாப்பு வழங்கக்கோரியும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி இராணிப்பேட்டை மேற்கு மாவட்டம் சார்பில் மேற்கு மாவட்ட செயலாளர் ஆயிலம் ப.பிரபு (எ) பிரபாகரன் தலைமையில் அளவில் ஆற்காடு பேருந்து நிலையம் அருகே உள்ள புரட்சியாளர் டாக்டர். அம்பேத்கார் அவர்களின் திருவுருவ சிலை அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு நமது கட்சியின் மாநில, மாவட்ட துணைநிலை அமைப்புகள் மகளிர்,நகர, பேரூர் நகர, ஒன்றிய செயலாளர்கள்,மற்றும் முகாம் செயலாளர்கள் அனைவரும் கட்சி கொடியை கையில் ஏந்தி கொண்டு ஆர்ப்பாட்டத்திற்கு திரளாக கலந்து கொண்டு இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தின் மூலமாக நமது எதிர்ப்பினை இராணிப்பேட்டை மேற்கு மாவட்டம் சார்பாக தெரிவித்துள்ளனர்.
ஆற்காடு செய்தியாளர் ஆனந்த்.


கருத்துகள்
கருத்துரையிடுக