மங்களூரில் அதிமுக சார்பில் நடைபெற்ற பூத் கழக நிர்வாகிகள் பயிற்சி கூட்டம்!!
மாண்புமிகு அதிமுக கழகப் பொதுச் செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும் முன்னாள் தமிழக முதல்வருமான எடப்பாடியார் அவர்களின் ஆணைக்கிணங்க கடலூர் மேற்கு மாவட்டத்தில் உள்ள திட்டக்குடி சட்டமன்ற தொகுதியில், பூத் கழக நிர்வாகிகளுக்கான பணிகள் குறித்து பயிற்சிக் கூட்டங்கள் இன்று 11.10.2025 சனிக்கிழமை காலை 10.00 மணி முதல்
மங்களூர் மேற்கு ஒன்றியம், மங்களூர் கிழக்கு ஒன்றியம், நல்லூர் மேற்கு ஒன்றியம் ஆகிய மூன்று இடங்களில் சிறப்பாக நடைபெற்றது. கூட்டத்தில் வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு, வாக்குச்சாவடி தோறும் பிரச்சாரம் உள்ளிட்டவை குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. கழக நிர்வாகிகள், பூத் கழக நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
நல்லூர் தெற்கு ஒன்றியம் மற்றும் பெண்ணாடம் பேரூராட்சி ஆகிய இரண்டு இடங்களில் அனைத்து ஏற்பாடுகளும் சிறப்பாக செய்யப்பட்டு இருந்தும் கனமழை காரணமாக பயிற்சி கூட்டங்கள் ஒத்திவைக்கப்பட்டது.
கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.




கருத்துகள்
கருத்துரையிடுக