வயலில் இடி விழுந்து நான்கு பெண்கள் பலி - எஸ் பி விசாரணை!!
கடலூர் மாவட்டம், திட்டக்குடி அருகே கழுதூர் அரியநாச்சி கிராமத்தில், சிவகுமார் என்பவருக்கு சொந்தமான வயலில் மக்காச்சோளத்திற்கு களை எடுக்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது, இடியுடன் கூடிய மழையால் வேல்முருகன் மனைவி கனிதா, ராமசாமி மனைவி பாரிஜாதம், சின்னப்பொண்ணு (ராஜேஸ்வரி), மற்றும் அரியநாச்சியை சேர்ந்த சிவகுமார் மனைவி ராஜேஸ்வரி ஆகியோர் மீது இடி விழுந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். கழுதூர் கிராமத்தைச் சேர்ந்த கதிரவன் மனைவி தனலட்சுமி காயமடைந்து வேப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து வேப்பூர் காவல்துறையினர் மற்றும் தீயணைப்புத் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினார்.
கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்
கருத்துரையிடுக