நல்லாசிரியர் விருதுபெற்ற முனைவர். ராஜா. ஆ அவர்களுக்கு பாராட்டு விழா!!

உரையாசிரியர் புலியூர் கேசிகன் இலக்கிய பேரவை சார்பில் சென்னை கோடம்பாக்கம் படைப்பு அரங்கில், பண்ருட்டி அரசு மேல்நிலைப்பள்ளி தேசியமாணவர்கள்அலுவலரும்,பண்ருட்டி திருவள்ளுவர் முத்தமிழ்ச்சங்க செயல் தலைவரும்,உரையாசிரியர் புலியூர் கேசிகன் இலக்கிய பேரவையின் பொறுப்பாளருமான முனைவர். ராஜா. ஆ அவர்கள் தமிழ்நாடு அரசின் 2025 ஆம் ஆண்டின் சிறந்த ஆசிரியர்களுக்கான டாக்டர். ராதாகிருஷ்ணன் விருது மாநில நல்லாசிரியர் விருது பெற்றமைக்காக

பேராசிரியர் சுப. வீரபாண்டியன் அவர்கள் தலைமையில் பாராட்டு விழா மற்றும் தன்னம்பிக்கை செம்மல் விருது வழங்கும் விழா நடைபெற்றது. இவ்விழாவிற்கு

அமைப்பின் நிறுவனர் செயலர் கவிஞர். கலைச்செல்விபுலியூர் கேசிகன் அவர்கள் மாநில நல்லாசிரியர் விருது பெற்ற முனைவர். ராஜா அவர்களுக்கு தன்னம்பிக்கை செம்மல் விருது வழங்கி சிறப்பித்தார்.

விழாவில் அமைப்பின் தலைவர். த.கு.திவாகரன் அவர்கள்,நிமிர் இலக்கிய வட்ட தலைவர். பாபு சசிந்திரன், இந்துதமிழ் திசை மு .முருகேஷ் அவர்கள், திரைப்பட இயக்குனர். பிருந்தா சாரதி,சிலம்பொலி செல்லப்பன் அறக்கட்டளையின் கொங்குவேள் அவர்கள்,

தமிழ்ச்செம்மல் முனைவர். இரா.சஞ்சீவிராயர் புலவர். ரத்தின ஆறுமுகம்,அன்புத்தமிழரசன்,சுப்ரஜா பிரதீப் குமார் அவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு மாநில நல்லாசிரியர் விருது பெற்ற கவிஞர். ராஜா ஆ அவர்களை பாராட்டி வாழ்த்தினார்.பாராட்டு விழாவின் நிறைவாக  ரூஃபஸ் ஆண்டனி நன்றி கூறினார்.நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை உரையாசிரியர். புலியூர் கேசிகன் நிறுவனர் செயலர் கவிஞர். கலைச்செல்வி அவர்கள் செய்திருந்தார்.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!