உலக அஞ்சல் தினம்! மாணவர்கள் சேமிப்பு கணக்குகள் தொடங்கினர்!!
ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் தலைமை அஞ்சல் அலுவலகத்தில் உலக அஞ்சல் தினம் மாணவர்களுடன் கொண்டாடப்பட்டது.இதனை முன்னிட்டு அரக்கோணம் அம்பாரி வித்யா மந்திர் பள்ளி மாணவ, மாணவியர்கள் திரளாக கலந்து கொண்டனர். இந்த தபால் தின கொண்டாட்டத்திற்கு அரக்கோணம் தலைமை அஞ்சல் அலுவலர் பொறுப்பு. நடராஜன் தலைமை தாங்கினார். துணை அஞ்சல் அலுவலர். சரவணன் முன்னிலை வகித்தார்.மக்கள் தொடர்பு ஆய்வாளர். ஸ்ரீனிவாச சம்பத் அனைவரையும் வரவேற்றார்.
தலைமை அஞ்சல் அலுவலர் பொறுப்பு நடராஜன் மாணவர்கள் மத்தியில் பேசியபோது புதிய சேமிப்பு கணக்குகள் தொடங்குவது குறித்தும் நன்மைகள் குறித்தும், நண்பர்கள் உறவினர்களுக்கு கடிதம் எழுதுவது குறித்தும், புதிய அஞ்சல் காப்பீடு துவங்குதல் உட்பட தபால் சேவை குறித்தான முழு விளக்கமளித்து பேசினார்.
தொடர்ந்து மாணவ, மாணவியர்களின் உலக அஞ்சல் தினம் கொண்டாடத்திற்கு பின் பல்வேறு சந்தேகங்களையும் அதிகாரிகளிடம்கேட்டறிந்தனர்.இறுதியில் பள்ளியின் ஒருங்கிணைப்பாளர். மோகனகுமாரி நன்றி கூறினார்.

கருத்துகள்
கருத்துரையிடுக