பண்ருட்டி மின்சாரத் துறையின் அலட்ச்சியத்திற்கு பொதுமக்கள் கண்டனம்!!
கடலூர் மாவட்டம்,பண்ருட்டி நகரமும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் கடந்த இரண்டு நாட்களாக மின்சாரம் வழங்கலில் ஏற்பட்டுள்ள தடைகள் பொதுமக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
நேற்றிலிருந்து தொடர்ச்சியாக மழை பெய்து கொண்டிருந்தாலும், காற்றோ, இடியோ இல்லாத நிலையில் கூட மின்சாரம் அடிக்கடி துண்டிக்கப்பட்டு வருவது மக்கள் மத்தியில் கடும் சினத்தை ஏற்படுத்தியுள்ளது. இரவு நேரங்களில் ஒரு மணி நேரம் வரை மின்சாரம் நிறுத்துவதும் பிறகு ஒரு நேரம் மின்சாரம் கொடுப்பதும் பிறகு ஒரு நேரம் நிறுத்துவதும் இதே போல் தொடர்ந்து இருப்பதால்மக்கள் அவதியுற, சிறுவர்கள், முதியவர்கள், நோயாளிகள் என அனைவரும் பெரும் சிரமத்துக்குள்ளாகியுள்ளனர்.
மின்சாரம் வழங்கப்பட்டாலும் சில நிமிடங்களிலேயே மீண்டும் துண்டிக்கப்படுவது மக்களின் அன்றாட வாழ்க்கையை பாதிக்கிறது. மின்சார கட்டணத்தை முன்கூட்டியே செலுத்தியும், துறை சரியான முறையில் சேவையளிக்கவில்லை என மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
மாதாந்திர பராமரிப்பு பணிகள் எனக் கூறி மின்சாரம் நிறுத்தப்படும் நேரங்களில் கூட, சரியான பணிகள் நடைபெறவில்லை என மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
> “மின்சார வாரியம் தங்களது பணிகளை முறையாக செய்யாமல் தாண்டோடு தனமாக செயல்படுகிறது. இனிமேல் எந்தவிதமான அறிவிப்பும் இன்றி மின்சாரம் துண்டிக்கக் கூடாது. மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்,”
என பண்ருட்டி நகர மக்களின் சார்பில் கோரிக்கைமுன்வைக்கப்பட்டுள்ளது.பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு, தமிழக அரசு மற்றும் கடலூர் மாவட்ட நிர்வாகம் பண்ருட்டி மின்சார வாரியத்தின்மீது உரிய நடவடிக்கை எடுத்து, இப்பகுதி மக்களுக்கு தொடர்ந்து மின்சாரம் வழங்கப்படுமாறு உறுதி செய்ய வேண்டும் என மக்கள் வலியுறுத்துகின்றனர்.
கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்
கருத்துரையிடுக