அரக்கோணம் ஏ. பி. எம் நகரில் நடைபெற்ற பெருமாள் திருக்கல்யாணம்!!

ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம், பழனிப்பேட்டை ,ஏ பி எம் நகர் பகுதியில் ஸ்ரீ வெங்கடாஜலபதி ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தில் 40 ஆம் ஆண்டு பாதயாத்திரை திருவிழாவும் ஸ்ரீதேவி பூதேவி சமேத வெங்கடாசலபதி திருமண வைபவமும்  நடைபெற்றது. இதனை முன்னிட்டு மங்கள வாத்தியங்கள் முழங்க நூற்றுக்கணக்கான மக்கள் ஒன்று திரண்டு ஸ்ரீதேவி பூதேவி சமேத வெங்கடாசலபதி திருமண வைபவத்தில் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகள் தர்மகர்த்தா டிகே.சுப்பிரமணி . தலைமையில் கோவில் கமிட்டி தலைவர் வழக்கறிஞர். ஆர்..பத்மநாபன் செயலாளர்.ஜி.பி.நாகராஜன் . ஆகியோர் முன்னிலையில் . துணைதலைவர்.பாபு,  துணை செயலாளர். அங்கைய்யா பொருளாளர்கள். சுந்தர்ராஜ், ஜப்பான், இணை செயலாளர். சூர்யநாராயணன் . ஆகியோரும் திருமணம் மற்றும் பாதயாத்திரை  குழுவில் ஒன்றிணைந்து  ஈடுபட்டனர்.

மேலும் திருமண நிகழ்வுகளில் ஆலய  குருக்கள் :ரோசைய்யா, சுமன், .சேஷாத்ரி, மற்றும் :சிவராஜ், வெங்கடேஷ், கோபி, அரிபாபு, பாலமுரளி, வெங்கடேசன், சிவக்குமார், நாகநந்தன், ஜெய்குமார், சிவா, மகேஷ், கிருஷ்ணராஜ், .பரசுராமன், சௌந்தர், அஜித்குமார் ஆகியோரும் பொதுமக்கள் இளைஞர்கள் பலரும் விழா பணிகளில் ஈடுபட்டனர். கடைசியில் அனைவருக்கு திருமண விருந்து வழங்கப்பட்டது.

அரக்கோணம் செய்தியாளர் ரவி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!