நெய்வேலி:என் தொகுதி மக்களுக்கு பெருமிதம் தரும் நாளொன்று!!

கடலூர் மாவட்டம்,நெய்வேலி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட காட்டுக் கூடலூர் மற்றும் மேல்காங்கேயன் குப்பம் ஊராட்சிகளில், பொதுமக்கள் பயன்பெறும் வகையில் புதிய ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடங்களை இன்று திறந்து வைத்தேன்.

காட்டுக் கூடலூர் ஊராட்சியில், மகாத்மா காந்தி தேசிய வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் ₹28.10 லட்சம் மதிப்பீட்டில் கட்டிடம் அமைக்கப்பட்டது.மேல்காங்கேயன்குப்பம் ஊராட்சியில், அண்ணா கிராம மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ₹32 லட்சம் மதிப்பீட்டில் கட்டிடம் அமைக்கப்பட்டது.

இந்தக் கட்டிடங்கள், பொதுமக்கள் தங்கள் அன்றாட தேவைகள் மற்றும் அரசுத் திட்டங்களை எளிதில் பெறக்கூடிய ஒரு மையமாக பயன்படும்.  இந்நிகழ்ச்சியில் முன்னாள் பண்ருட்டி ஒன்றியப் பெருந்தலைவர். சபா. பாலமுருகன் தலைமை வகித்தார்.

மேலும் பொதுக்குழு உறுப்பினர். புகழேந்தி, முன்னாள் மாவட்ட கவுன்சிலர். ஜெகநாதன், ஒன்றிய துணைச் செயலாளர். சுமதி நந்தகோபால், முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் பாரி, முன்னாள் கவுன்சிலர்கள் ஞானசேகர், அருள்முருகன், அஞ்சிலட்சம், பாலசண்முகம், மாவட்ட மருத்துவர் அணி அமைப்பாளர். ராஜேஷ், மேலிருப்பு அன்பழகன், தகவல் தொழில்நுட்ப அணி தொகுதி ஒருங்கிணைப்பாளர். ஆனந்தன், கோதண்டபாணி, பூபதி, ராமு, ரவிச்சந்திரன், தனபால், கலைமணி, ஞானப்பிரகாசம், குப்புசாமி, ரமேஷ், சிவசண்முகம், பாண்டியன், செல்வராஜ், பழனிவேல், சக்திவேல், சேகர், கலியபெருமாள், குணசேகரன், சிவலிங்கம், பழனி, ஜெகநாதன், வழக்கறிஞர் ஆகாஷ், ரவி, ஏழுமலை, அரசன், சுரேஷ், ராஜாமணி, தேவேந்திரன், வாசுதேவன், செல்வராஜ், தனசேகரன், தக்ஷிணாமூர்த்தி, ஏழுமலை கிருஷ்ணமூர்த்தி, ஞானப்பிரகாசம், தேவராசு, ஊராட்சி செயலாளர்கள். ராஜேந்திரன், சச்சிதானந்தம் உள்ளிட்ட கழக நிர்வாகிகள், பொதுமக்கள் பெருமளவில் கலந்து கொண்டனர்.

என் எண்ணம்:"ஊராட்சிகளில் அரசு அலுவலகங்கள் என்பது சாதாரண கட்டிடம் அல்ல. அது மக்கள் நலனுக்கான நுழைவாயில். என் தொகுதி மக்களின் தேவைகள் உடனுக்குடன் நிறைவேறும் வகையில் இக்கட்டிடங்கள் உதவும் என்பதில் பெரும் திருப்தி அடைகிறேன்.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!