கடலூர் சிட்கோ ஹேமா எண்டர்பிரைசஸ் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களிடம் சைபர் கிரைம் குறித்து விழிப்புணர் பிரச்சாரம்!!
கடலூர் மாவட்டம்,கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர். ஜெயக்குமார் ஐ.பி.எஸ் அவர்களின் உத்தரவின்பேரில் கடலூர் மாவட்ட சைபர் கிரைம் கூடுதல் காவல் கண்காணிப்பாளர்.V. ரகுபதி அவர்களின் தலைமையில் காவல் ஆய்வாளர். கவிதா மற்றும் சைபர் கிரைம் காவலர்கள் கடலூர் சிட்கோ, ஹேமா என்டர்பிரைசஸ் நிறுவனத்தில் பணி புரியும் ஊழியர்களிடம் சைபர் கிரைம் சம்பந்தமாக விழிப்புணர்வு ஏற்படுத்தி துண்டு பிரசுரங்கள் கொடுக்கப்பட்டது, OTP தொடர்பான குற்றங்கள் குறித்தும் காவல் உதவி App, தனிநபர் கடன், டிஜிட்டல் அரெஸ்ட், Loan Apps, school scholarship scams ,Part time jobs பற்றி சைபர் கிரைம் போலீசார் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும் சைபர் கிரைம் இலவச உதவி எண்: 1930 மற்றும் www.cybercrime.gov.in குறித்து விளக்கமளிக்கபட்டது.
கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்
கருத்துரையிடுக