அரக்கோணம் நகராட்சிக்கு மூன்று பேட்டரி வாகனங்கள் வழங்கிய அல்ட்ரா நிறுவனம்!
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் நகராட்சி 36 வார்டுகளிலும் திடக்கழிவு மேலாண்மை பணிகள் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இப்பணிகளுக்கு பேர் உதவியாக அரக்கோணம் அல்ட்ராடெக் நிறுவனம் சிஎஸ்ஆர் திட்டத்தின் கீழ் அரக்கோணம் நகராட்சிக்கு ஐந்து லட்சம் மதிப்பீட்டில் மூன்று பேட்டரி வாகனங்களை வழங்கியது.
இந்நிகழ்ச்சியில் நகர மன்ற தலைவர். லட்சுமி பாரி கலந்து கொண்டு கொடி அசைத்து துவக்கி வைத்தார். மேலும் நகராட்சி ஆணையர் க.ஆனந்தன் , நகரமன்ற துணைத் தலைவர் அ. கலாவதி, நகராட்சி பொறியாளர். விஜயகுமார், துப்புரவு அலுவலர். வெயில் முத்து ஆகியோருடன் அல்ட்ராடெக் நிறுவன அலுவலர்கள். பாஸ்கர், பி விஜயகுமார்,கே. வெங்கடேஸ்வரா ரெட்டி, ஒருங்கிணைப்பாளர் தீபா, மற்றும் நகராட்சி அலுவலர்கள் மற்றும் பணியாளர்களும் இதில் கலந்து கொண்டனர்.
அரக்கோணம் செய்தியாளர் ரவி

கருத்துகள்
கருத்துரையிடுக