சிதம்பரம்: பூதங்குடி எஸ்.டி சீயோன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம்!!
கடலூர் மாவட்டம், சிதம்பரம் வட்டம், பூதங்குடி எஸ்.டி சீயோன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாமினை (11.10.2025) அன்று தொடங்கி வைத்து, அரசு நலத்திட்ட உதவிகளை வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர். எம். ஆர். கே. பன்னீர்செல்வம் அவர்கள் வழங்கினார்.
உடன் மாவட்ட ஆட்சித்தலைவர்.சிபி ஆதித்யா செந்தில்குமார் இ.ஆ.ப., மாவட்ட சுகாதார அலுவலர். மரு.பொற்கொடி மற்றும் துறை சார்ந்த அரசு அலுவலர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.



கருத்துகள்
கருத்துரையிடுக