ஸ்ரீ புரம் ஸ்ரீ நாராயணி குழும டிவைன் கஃபே உயர்தர சைவ உணவக ஹோட்டல் திறப்பு விழா! அமைச்சர் ஆர். காந்தி பங்கேற்று திறந்து வைப்பு !!
இராணிப் பேட்டை மாவட்டம், வாலாஜா தாலுகா, பூண்டி கிராமம் ஆலப்பாக்கம் சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை அருகே, புகழ்பெற்ற ஸ்ரீபுரம் ஸ்ரீ நாராயணி குழும, டிவைன் காஃபே உயர்தர சைவ உணவகம் ஹோட்டல் திறப்பு விழா, ஸ்ரீ சுகி பார்மா மற்றும் டிவைன் கஃபே இயக்குநர்கள். ஸ்ரீநாத், ஸ்ரீகாந்த் ஆகியோர் தலைமையிலும், ஸ்ரீ நாராயணி மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையம் இயக்குனர் டாக்டர். என்.பாலாஜி முன்னிலையிலும் இவ்விழா நடைபெற்றது.
இதில் சிறப்பு அழைப்பாளர்களாக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர். ஆர்.காந்தி மற்றும் ஆற்காடு சட்டமன்ற உறுப்பினர் ஜெ.எல். ஈஸ்வரப்பன் MLA, வேலூர் சட்டமன்ற உறுப்பினர். கார்த்திகேயன் MLA ஆகியோர் கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி திறந்து வைத்து குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தனர்.
சிறப்பு விருந்தினர்களாக வேலூர் மாநகராட்சி மேயர். சுஜாதா ஆனந்தகுமார், ரத்தினகிரி. பாலமுருகனடிமை சுவாமிகள், கலவை. சச்சிதானந்தா சுவாமிகள், தன்வந்திரி. முரளிதர சுவாமிகள், சித்தஞ்சி. சிவகாளி சுவாமிகள், வாலாஜா நகர மன்ற தலைவர். ஹரிணி தில்லை, ஆற்காடு நகர மன்ற தலைவர். தேவி பென்ஸ் பாண்டியன், தொழிலதிபர்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டு திறப்பு விழாவினை சிறப்பித்தனர். இதனைத் தொடர்ந்து சிறப்பு அழைப்பாளர்களையும் மற்றும் சிறப்பு விருந்தினர்களையும் நிர்வாகத்தின் சார்பில் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டது. இந்நிகழ்வின் போது ஸ்ரீ புரம் ஸ்ரீ நாராயணி குழும அலுவலர்கள், பணியாளர்கள் டிவைன் கஃபே குழும அலுவலர்கள் பணியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டு இவ்விழாவை சிறப்பித்தனர்.
ராணிப்பேட்டை மாவட்ட செய்தியாளர் பிரகாசம்.

கருத்துகள்
கருத்துரையிடுக