கனமழையின் காரணமாக வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் இருவர் பலி! அமைச்சர். எம். ஆர். கே. பன்னீர்செல்வம் நேரில் சென்று அஞ்சலி!!
கடலூர்மாவட்டம்கடலூர் வட்டம், ஆண்டார் முள்ளி பள்ளம் கிராமத்தில் வசித்து வரும் அசோதை வயது 66 கணவர் பெயர் மணி மற்றும் அவரது மகள் ஜெயா கணவர் பெயர். ராயர் வயது 48 என்பவர்கள் தங்களுக்கு சொந்தமான ஓட்டு வீட்டில் இருந்தபோது கனமழை காரணமாக ஓட்டு வீட்டின் சுவர் ஈரமடைந்து அவர்களின் மேல் விழுந்துவிட்டது( சுமார் காலை 10 மணி அளவில்) இதில் படுகாயம் அடைந்து இருவரும் இறந்து விட்டார்கள்
மேற்படி இருவரின் உடலும் கடலூர் தலைமை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது. இதில் இறந்துவிட்ட அசோதை என்பவருக்கு மணி என்ற கணவர் உயிருடன் உள்ளார். இவருக்கு மூன்று ஆண் பிள்ளைகள் ஒரு பெண் பிள்ளை மற்றும் இறந்துவிட்ட ஜெயா என்பவருக்கு இரண்டு பெண் பிள்ளைகள் இருவருக்கும் திருமணமாகிவிட்டது. ஒரு ஆண்மகன். ராஜேஷ் திருமணம் ஆகவில்லை மேற்படி இறந்துவிட்ட ஜெயா என்பவர். குறிஞ்சிப்பாடி வட்டம், தம்பி பேட்டை கிராமத்தில் திருமணம் செய்து கொண்டார். அவரின் கணவர். ராயர் என்பவர் இறந்துவிட்டபடியால் மேலும் இரண்டு பெண்களுக்கும் திருமணம் ஆகி விட்டபடியால் தனது தாயின் ஊரான ஆண்டார் முள்ளி பள்ளம் கிராமத்தில் தனது தாய் தந்தையுடன் வசித்து வந்தார் மேற்படி இறந்துவிட்ட இரண்டு நபர்களும் கூலி வேலை செய்து வருகின்றார்கள். தகவல் அறிந்து உடன் மாண்புமிகு வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர். எம். ஆர். கே. பன்னீர்செல்வம் அவர்கள் சம்பவ இடத்திற்கு சென்று உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ஆறுதல் கூறி அஞ்சலி செலுத்தினார்.
மேலும் அரசின் சார்பாக வேண்டிய உதவிகள் கிடைப்பதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டார். உடன் ஒன்றிய கழக செயலாளர்கள். குறிஞ்சிப்பாடி தெற்கு வீ. சிவகுமார் வடக்கு ஆர். நாராயணசாமி மற்றும் கழக நிர்வாகிகள் மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.
கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.


கருத்துகள்
கருத்துரையிடுக