கடலூர்: ஆன்லைன் லாட்டரி விற்பனை.. பாஜக பிரமுகர் கைது!!
கடலூர் மாவட்டம், மஞ்சக்குப்பம் பகுதியில் ஆன்லைன் லாட்டரி சீட்டு விற்பனை நடைபெறுவதாக கிடைத்த தகவலின் பேரில், புதுநகர் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, ஜெயராமன் (62), அவரது மனைவி மல்லிகா (55), மகன் சாரதி, பிரகாஷ் (44) ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 5 செல்போன்கள் மற்றும் ரூ. 22 லட்சத்து 94 ஆயிரம் ரொக்கப் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. பிரகாஷ் கடலூர் பாஜக நெசவாளர் அணி நிர்வாகி என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்
கருத்துரையிடுக