கரூர்: கலப்புக் குழு போட்டியில் வெண்கலம் வென்ற செல்வி.ஆர்.டி. யாழினி அவர்களை பாராட்டிய முன்னாள் அமைச்சர். செந்தில் பாலாஜி!!
கரூர் மாவட்டம்,மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர். மு. க. ஸ்டாலின் அவரின் நல்லாசிகளுடன், தமிழ்நாட்டில் இருந்து உலக தரத்திலான விளையாட்டு வீரர்களை உருவாக்கிடும் உன்னத நோக்கில் அயராது உழைத்திடும், மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர். உதயநிதி ஸ்டாலின் அவர்களின் ஆசிகளுடன், தென்கொரியாவில் நடைபெற்ற 9வது ஆசிய Soft tennis சாம்பியன்ஷிப்பில் கலந்துக்கொண்டு, கலப்புக் குழு போட்டியில் வெண்கலம் வென்று, மாநிலத்திற்கும் நாட்டிற்கும் பெருமை சேர்த்த, செல்வி. ஆர்.டி. யாழினி அவர்களை முன்னாள் அமைச்சரும் கரூர் மாவட்ட திமுக செயலாளர் மற்றும் கொங்கு மண்டல தேர்தல் பொறுப்பாளருமான செந்தில் பாலாஜி அவர்கள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தார்.
கரூர் மாவட்ட செய்தியாளர் சக்திவேல்.

கருத்துகள்
கருத்துரையிடுக