காக்கும் கரங்கள் அன்னதான நல சங்கம் சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்!!

 
ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு காக்கும் கரங்கள் அன்னதான நல சங்கம் சார்பில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. சங்கத்தின் தலைவர் கு.தணிகேசன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், 100க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு அரிசி மற்றும் மளிகைப் பொருட்கள் அடங்கிய தொகுப்புகள் வழங்கப்பட்டன. செயலாளர் த.பெருமாள், பொருளாளர் கே.சீனிவாசன் மற்றும் சமூக சேவகர் கே.உதயகுமார் ஆகியோர் ஏற்பாடுகளை செய்திருந்தனர். 

வாணிகரனி மாவட்டத் தலைவர் பொன் கு.சரவணன், நாட்டு மருந்து கடை கே.கணேசன், ஊராட்சி மன்ற தலைவர் எம்.சேட்டு, மணியம் பாஸ்கர், பெல் பிரபு, எம்.ஜிம் சங்கர், தா.கு.கணேசன், ஏ.பொன்னுரங்கம், வி.ராஜேந்திரன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு நிகழ்ச்சியினை தொடங்கி வைத்தனர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

ஆற்காடு செய்தியாளர் ஆனந்த்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!