ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு சிபிஐயிடம் ஒப்படைக்க கோரி அரக்கோணத்தில் ஆர்ப்பாட்டம்!!
ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் பழைய பேருந்து நிலையத்தில் தமிழ் மாநில பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மறைந்த பகுஜன் சமாஜ் கட்சி தலைவர். ஆர்ம்ஸ்ட்ராங் கொலை வழக்கு குற்றவாளிகளை விசாரிக்க உயர்நீதிமன்றமும் உச்ச நீதிமன்றமும் உத்தரவு வழங்கி 26 நாட்கள் ஆகி விட்ட நிலையில் விசாரணைக்கு சிபிஐ இடம் ஏன் ஒப்படைக்க வில்லை என கேட்டு கொட்டும் மழையில்
ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ராணிப்பேட்டை மாவட்ட செயலாளர். செந்தில்குமார் தலைமை வகித்தார். மாநில செயலாளர். பிரவீன் குமார், மாநில துணை பொது செயலாளர். பொன் கிருஷ்ணன், முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக மாநில தலைவர். மைக்கேல் தாஸ் கலந்து கொண்டு பேசினார் கூட்டத்தில் மாநில துணை பொது செயலாளர். இளவரசன் மாநில செயலாளர். பிரபாகரன் கொள்கை பரப்பு செயலாளர். மகேந்திரன் ஆகியோரும் பேசினர். மாநில மாவட்ட நகர ஒன்றிய நிர்வாகிகள் மற்றும் பெண்கள் உட்பட 300-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.
அரக்கோணம் செய்தியாளர் ரவி.

கருத்துகள்
கருத்துரையிடுக