பண்ருட்டி திருவதிகை சிவன் கோயில் அருகில் நடைபெற்ற புதிய அங்கன்வாடி கட்டிடம் திறப்பு விழா!!
கடலூர் மாவட்டம்,மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர். மு. க. ஸ்டாலின் அவர்கள் நல்லாட்சியில் பண்ருட்டி நகராட்சிக்கு உட்பட்ட 15 வது வார்டு திருவதிகை சிவன் கோயில் அருகில் கனிமவள நிதி 2024-2025 கீழ் ரூபாய் 15 லட்சம் மதிப்பீட்டில் புதிய அங்கன்வாடி கட்டிடம் திறப்பு விழா நேற்று 31.10.2025 நடைபெற்றது. பண்ருட்டி நகர மன்ற தலைவரும் நகர திமுக கழக செயலாளருமான க. இராஜேந்திரன் அவர்கள் கலந்துகொண்டு ரிப்பன் வெட்டி குத்துவிளக்கேற்றி திறந்து வைத்தார்.
உடன் நகராட்சி ஆணையாளர். காஞ்சனா உதவி பொறியாளர். கார்த்திகேயன் நகர அவைத் தலைவர். ராஜா நகர துணை செயலாளர். கௌரி அன்பழகன் மாவட்ட பிரதிநிதி. பிரபு நகர மன்ற உறுப்பினர்கள். சண்முக வள்ளி பழனி, தில்லைக் கரைசி, துரை கிருஷ்ணராஜ் மற்றும் அங்கன்வாடி அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் மாணவர்கள் கலந்து கொண்டனர்.
கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.




கருத்துகள்
கருத்துரையிடுக