புதிய மேம்பாலம் கட்டுமான பணிக்கு அடிக்கல் நாட்டு விழா குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார் மத்திய அமைச்சர். நிதின் கட்கரி!!
புதுச்சேரியில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் தேசிய நெடுஞ்சாலை கோட்டம் இந்திரா காந்தி சதுக்கம் முதல் ராஜீவ் காந்தி சதுக்கம் வரை ரூ.436 கோடியில் 4, கி.மீ. தொலைவுக்கு புதியதாக கட்டப்படவுள்ள சாலைகளைஇணைக்கும் மேம்பாலம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழாவை, மாண்புமிகு மத்திய சாலை மற்றும் போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார்.
மாண்புமிகு துணைநிலை ஆளுநர் கைலாசநாதன், மத்திய தகவல் ஒளிபரப்புத் துறை இணை அமைச்சர் எல் முருகன், மாண்புமிகு முதலமைச்சர் ரங்கசாமி, மாண்புமிகு உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் மாண்புமிகு பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமி நாராயணன் ஆகியோர் உடன் இருந்தனர்.
புதுச்சேரி மாநில செய்தியாளர் குமரவேல்.




கருத்துகள்
கருத்துரையிடுக