மேலபுலம் கிராமத்தில் நடைபெற்ற “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாம்! பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய ஒன்றிய குழு தலைவர். பெ. வடிவேலு!!


இராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி ஊராட்சி ஒன்றியம், மேலபுலம் கிராமம், ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் "உங்களுடன் ஸ்டாலின்"திட்ட முகாம் நடைபெற்றது. முகாமிற்கு நெமிலி வட்டார வளர்ச்சி அலுவலர். சிவக்குமார் தலைமை தாங்கினார், மேலபுலம் ஊராட்சி மன்ற தலைவர். அனிதா நாராயணன் முன்னிலை வகித்தார். இதில் சிறப்பு அழைப்பாளராக நெமிலி ஒன்றிய பெருந்தலைவர் பெ. வடிவேலு அவர்கள் கலந்துகொண்டு முகாமினை பார்வையிட்டு, மனுக்கள் மீது தீர்வு காணப்பட்ட பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். முகாமில் மேலபுலம் ஊராட்சியை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு கோரிக்கை மனுக்களை அளித்தனர்.

இந்நிகழ்ச்சியில், மேலபுலம் கிளை செயலாளர். விஜயன், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர். பிரகாஷ், மாவட்ட பிரதிநிதி. பார்த்திபன், பள்ளி மேலாண்மை குழு தலைவர். மணிமேகலை லிங்கநாதன், பள்ளியின் தலைமை ஆசிரியர். விநாயகம், கிளை நிர்வாகிகள். பேரானந்தம், சத்யசீலன், ராஜமாணிக்கம், துரை, மற்றும் அரசுத் துறை அலுவலர்கள், பொதுமக்கள் மற்றும் பலர் இதில் கலந்துகொண்டனர்.

ராணிப்பேட்டை மாவட்ட செய்தியாளர்‌ மு. பிரகாசம் 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!