பண்ருட்டி அரசு பெண்கள் பள்ளியில் நடைபெற்ற மேல்நிலை வகுப்புகள் தொடக்க விழா!!


கடலூர் மாவட்டம்,பண்ருட்டி அரசு பெண்கள் உயர்நிலைப் பள்ளியை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தி தமிழ்நாடு அரசு அண்மையில் அறிவித்தது. நீண்ட நாள் பண்ருட்டி மக்களின் எதிர்பார்ப்பான அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி  ஆண்டு முதல் செயல்படும் என்று அறிவித்தது பண்ருட்டி பகுதி மக்களுக்கு பெரு மகிழ்ச்சி அளித்தது. இந்நிலையில் மேல்நிலை வகுப்புகள் தொடங்கப்படும் விழா பள்ளி பொறுப்பு தலைமை ஆசிரியர். சு.திருமாவளவன் அவர்கள் தலைமையில்நடைபெற்றது.இந்நிகழ்விற்கு தேசிய மாணவர் படை அலுவலர் முனைவர். ராஜா வரவேற்புரையாற்றினார்.

அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி பெற்றோர் கழக தலைவர். CR.சக்திவேல் அவர்கள்,அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர். சார்பில்சுமையா  ஜாஹீர்உசேன் அவர்களும்,பள்ளி வளர்ச்சி குழு துணை தலைவர். சண்முகவள்ளி பழனிஅவர்களும் ,ஆண்கள் மேல்நிலைப்பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக துணைத் தலைவர். ஏ.வீ.லோகநாதன்

அவர்களும் முன்னிலை வகித்தனர். பண்ருட்டி நகர மன்ற தலைவரும், பள்ளி வளர்ச்சி குழுதலைவர்மான க.ராஜேந்திரன் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு குத்து விளக்கேற்றி சிறப்புரையாற்றி இனிப்புகள் வழங்கி மேல்நிலை வகுப்புகளை தொடங்கி வைத்தார்.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!