அரியலூரில் நடைபெற்ற 'என் வாக்குச்சாவடி' "வெற்றி வாக்குச்சாவடி" ஆலோசனை கூட்டம்!!
அரியலூர் மாவட்டம்,மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர். M. K. ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலின்படி, அரியலூர் மாவட்டக் கழகத்தின் சார்பில் ‘என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி’ ஆலோசனைக் கூட்டம் நேற்று (31.10.2025) அரியலூரில் நடைபெற்றது.
மாண்புமிகு திமுக கழக முதன்மைச் செயலாளர்- மண்டல பொறுப்பாளர் மற்றும் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர். K.N. நேரு அவர்கள் இக்கூட்டத்தில் கலந்துகொண்டு, வரவிருக்கும் 2026 சட்டமன்றத் தேர்தலில் நாம் ஆற்ற வேண்டிய களப்பணிகள் குறித்தும், வாக்குச்சாவடி அளவில் கழகத்தை வலுப்படுத்துவது குறித்தும் சிறப்புரையாற்றி, ஆலோசனைகளை வழங்கினார்.
இக்கூட்டத்தில் கழக சட்டத்திட்ட திருத்த குழு இணைச் செயலாளர். சுபா.சந்திரசேகர், ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர். க.சொ.க.கண்ணன் உள்ளிட்ட அரியலூர், ஜெயங்கொண்டம், குன்னம் சட்டமன்றத் தொகுதிகளைச் சேர்ந்த BLA-2, BDA (பூத் IT Wing) நிர்வாகிகள்,கழக ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் அனைத்து அணி நிர்வாகிகளும் இக்கூட்டத்தில் கலந்துகொண்டனர்.
கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.



கருத்துகள்
கருத்துரையிடுக