காஞ்சி: கலைஞர் சிலை மற்றும் கலைஞர் நூற்றாண்டு அரங்கம் காணொளி வாயிலாக திறந்து வைத்த தமிழக முதல்வர்!!


காஞ்சிபுரம் மாநகர திமுக கழக அலுவலகத்தில் (கே.டி.எம்.மணி மாளிகை) கலைஞர் மார்பளவு சிலை மற்றும் கலைஞர் நூற்றாண்டு அரங்கம் காணோளி வாயிலாக மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர். மு. க. ஸ்டாலின் அவர்கள்  திறந்து வைத்தார்கள். அதனை தொடர்ந்து மாண்புமிகு கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர். ஆர்.காந்தி அவர்களோடு இணைந்து வேளாண்மை மற்றும் உழவர் நலத் துறை அமைச்சர். எம். ஆர். கே. பன்னீர்செல்வம் அவர்கள் குத்துவிளக்கேற்றி திறந்து வைத்தார்.


இதில் காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட கழக செயலாளர்.க.சுந்தர் MLA,காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர். க.செல்வம்,காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர். சி.வி.எம்.பி.எழிலரசன், மாநகர கழக செயலாளர். தமிழ்செல்வன், மேயர். மகாலட்சுமி யுவராஜ், மற்றும் மாவட்ட கழக நிர்வாகிகள், நகர,ஒன்றிய ,பேரூர் கழக செயலாளர்கள் மற்றும் கழகத்தினர் கலந்துக் கொண்டனர்.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!