ஆற்காடு ஸ்ரீ காளிகாம்பாள் சமேத கமண்டலேஸ்வரர் ஆலயத்தில் நடைபெற்ற நவராத்திரி மஹா உற்சவ விழா!!

ராணிப்பேட்டைமாவட்டம்,ஆற்காடு அருகே காளியம்மன் கோவில் தெருவில் அருள்பாலித்துள்ள அருள்மிகு ஸ்ரீ காளிகாம்பாள் சமேத கமண்டலேஸ்வரர் ஆலயத்தில் நவராத்திரி மகா உற்சவ விழாவெகுவிவரசையாகநடைபெற்றது.முன்னதாக கடந்த 22 ஆம் தேதி மாலை ஆலயத்தில் அருள் பாலித்துள்ள அருள்மிகு ஸ்ரீ கற்பக விநாயகருக்கு அபிஷேகமும் கடக ஸ்தாபனமும் மற்றும் அம்பாளுக்கு மகா அபிஷேகம் சிறப்பு அலங்காரமும் மகா தீபாரதனை காண்பிக்கப்பட்டு நவராத்திரி சிறப்பு பூஜையும் வெகு விமர்சியாக நாள்தோறும் நடைபெற்று வந்தது.

இந்த நிலையில் இன்று ஸ்ரீ காளிகாம்பாள் சமேத கமெண்டல் ஈஸ்வரர் ஆலயத்தில் நவராத்திரி நிறைவு நாளான இன்று ஸ்ரீ காளிகாம்பாள் அம்மனுக்கு சிறப்பு அலங்காரங்கள் செய்து கலச யாக பூஜைகளை மேற்கொண்டு பின்னர் மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஸ்ரீ காளிகாம்பாள் அம்மன் அலங்கரிக்கப்பட்ட தேர் வாகனத்தில் பல்வேறு மேல தாளங்கள் முழங்க வெகு விமர்சியாக ஊர்வலமாக வீதி உலா பவனி நிகழ்ச்சியும் நடைபெற்றது.இதில் ஏராளமான பக்தர்கள் வீதி உலா பவனி வந்த ஸ்ரீ காளிகாம்பாள் அம்மனை தரிசனம் செய்து அருள் பாலித்தார்.

ஆற்காடு செய்தியாளர் ஆனந்த்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!