அதிமுக இளம் பாசறை மாவட்ட அலுவலகத்தை திறந்த வைத்த சு. ரவி எம்எல்ஏ!
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த நெமிலி நகரில் அதிமுக இளம் பெண்கள் பாசறை மாவட்ட அலுவலகம் திறப்பு விழா நடைபெற்றது. இந்த விழாவிற்கு பாசறை மாவட்ட செயலாளர். அன்பரசு தலைமை தாங்கினார். இதில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட அதிமுக மாவட்ட செயலாளர் சு.ரவி எம்எல்ஏ விற்கு பட்டாசு வெடித்து, பேண்ட் வாத்தியம் முழங்க வரவேற்றனர். பிறகு சு. ரவி எம்எல்ஏ அவர்கள் எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்த பிறகு பாசறை அலுவலகத்தை திறந்து வைத்து பேசினார் பின்னர் 1000 பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட அவைத்தலைவர். சம்பத், மாநில இளம் பாசறை செயலாளர். ஷியாம்குமார், மாவட்ட துணை செயலாளர். மீனா, ஒன்றிய செயலாளர்கள். விஜயன், அருணாபதி, ராஜா, ஒன்றிய துணைச் செயலாளர். புருஷோத்தமன், வர்த்தக அணி மாவட்ட செயலாளர். தேவன், விவசாய அணி செயலாளர். திருமலை, நெமிலி ஒன்றிய பேரவை செயலாளர். சங்கர், நெமிலி நகர செயலாளர். செல்வம், முருகன், நவநீதகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இறுதியாக கிழக்கு ஒன்றிய இளம் பாசறை செயலாளர். நாகவேடு பிரபாகரன் நன்றி கூறினார்.
அரக்கோணம் செய்தியாளர் ரவி

கருத்துகள்
கருத்துரையிடுக