ஆரோக்கிய உணவு திருவிழா!
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டம் சார்பில் உலக உணவு தினத்தை முன்னிட்டு ஆரோக்கிய உணவுத் திருவிழாவை தொடங்கி வைத்தார். மதுரை மாவட்ட ஆட்சியர். பிரவீன் குமார் தலைமையில் ஆரோக்கிய உணவுத் திருவிழா சிறப்பாக தொடங்கப்பட்டது. ஆரோக்கியமான உணவு பழக்க வழக்கங்களை பற்றி விழிப்புணர்வு பெறும் வகையில் பல்வேறு உணவு கண்காட்சிகள் விளக்கக் காட்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. சிறுதானியங்கள், பழங்கள், பூக்கள் மூலம் வடிவமைக்கப்பட்ட மீனாட்சியம்மன் கோலம் அனைவரையும் கவர்ந்தது.
தேனி செய்தியாளர் சின்னதம்பி

கருத்துகள்
கருத்துரையிடுக