கடலுரில் சமத்துவ தீபாவளி!!
கடலூர் மாவட்டம்,ஆதரவற்ற குழந்தைகள், முதியோர்கள், மாற்றுத் திறனாளிகளுடன் சமத்துவ தீபாவளி விழா கடலூர் தலைமை அரசு மருத்துவ மனையில் கொண்டாடப்பட்டது.
மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இணை இயக்குநர் டாக்டர். மணிமேகலை தலைமை தாங்கி அனைவருக்கும் புத்தாடை மற்றும் இனிப்பு வழங்கினார் . கடலூர் டி.எஸ்.பி ரூபன்குமார் சிறப்புரையாற்றினார்.
மகப்பேறு மருத்துவர். பரமேஸ்வரி, மருத்துவமனை கண்காணிப்பாளர் மருத்துவர்.நடராஜன்,மருத்துவர்கள்பிரேமா, தம்பையா ,ஏஆர்டி மருத்துவர் .ஸ்ரீதரன்,சமத்துவ தீபாவளி விழாவில் ஆதரவற்ற குழந்தைகள், முதியோர்கள், மாற்றுத் திறனாளிகளுக்கு புத்தாடைகள், இனிப்புகள் வழங்கப்பட்டன.
அன்பால் ஒருங்கிணைவோம் அனைவருக்கும் துணை நிற்போம் என உறுதியேற்கப்பட்டது. இவ்விழாவில் நடைபெற்ற குழந்தைகளின் கண்கவர் கலை நிகழ்ச்சிகள் அனைவரையும் கவர்ந்தது.செவிலியர்கண்காணிப்பாளர். பிரேமாலதா நன்றி கூறினார். ஆதரவற்றோருக்கு புத்தாடைகள் இனிப்புகள் வழங்கினார். அருகில் அரசு மருத்துவர்கள், கடலூர் சிறகுகள் குழு, இளம் கடலூர் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.



கருத்துகள்
கருத்துரையிடுக