கன மழையின் காரணமாக பண்ருட்டி பேருந்து நிலையத்தில் சேதம் அடைந்துள்ள பகுதிகளை நேரில் சென்று பார்வையிட்ட நகர மன்ற தலைவர். க. ராஜேந்திரன்!!
கடலூர் மாவட்டம்,பண்ருட்டியில் பெய்த கன மழையின் காரணமாக பண்ருட்டி பேருந்து நிலையத்தில் சேதமடைந்துள்ள பகுதிகளை இன்று 25.10.2025 பண்ருட்டி நகர மன்ற தலைவரும் நகர கழக திமுக செயலாளருமான க.ராஜேந்திரன் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து அதிகாரிகளிடம் தொடர்பு கொண்டு உடனடியாக சரி செய்ய உத்தரவிட்டார் பேருந்து நிலைய புதிய கடைகள் கட்டும் பணி நடைபெற்று வருவதை பார்வையிட்டார்.
உடன் நகராட்சி ஆணையாளர். காஞ்சனா உதவி பொறியாளர். கார்த்திகேயன் நகர அவைத் தலைவர். ராஜா நகர துணை செயலாளர். கௌரி அன்பழகன் நகர மன்ற உறுப்பினர்கள். சண்முகவள்ளி பழனி, சாந்தி செந்தில், கிருஷ்ணராஜ், லாவண்யா முத்துவேல், வார்டு செயலாளர். மகா, கிருஷ்ணமூர்த்தி, நகர தொண்டரணி அமைப்பாளர் தயாளன், நகர இளைஞர் அணி துணை அமைப்பாளர். ராஜா, தொமுச நிர்வாகிகள், உடன் இருந்தனர்.
கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.




கருத்துகள்
கருத்துரையிடுக