அருள்மிகு கபாலீஸ்வரர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் புதிய கட்டுமான பணிகளை நேரில் சென்று பார்வையிட்ட அமைச்சர். சேகர்பாபு!!
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் நல்வழிகாட்டுதலின்படி இன்று (25.10.2025), சென்னை, கொளத்தூர், அருள்மிகு கபாலீஸ்வரர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி புதிய கட்டிட கட்டுமானப் பணிகளை இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
உடன் பெருநகர சென்னை மாநகராட்சி மேயர். பிரியா ராஜன், இந்து சமய அறநிலையத்துறை கூடுதல் ஆணையர். சி. ஹரிப்ரியா, இணை ஆணையர். சு. மோகனசுந்தரம், பெ.க.கவெனிதா, மாநகராட்சி மண்டலக் குழுத் தலைவர். சரிதா மகேஷ் குமார், துணை ஆணையர் . இரா ஹரிஹரன், மாநகராட்சி உறுப்பினர். நாகராஜன் மற்றும் அலுவலர்கள் உள்ளனர்.
கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.



கருத்துகள்
கருத்துரையிடுக