திருவள்ளுவர் முத்தமிழ்ச் சங்க காப்பாளருக்கு பாராட்டு!!
பண்ணுருட்டி திருவள்ளுவர் முத்தமிழ்ச் சங்கத்தின் காப்பாளரும்,சன் பில்டர்ஸ் உரிமையாளருமான வீ.சுப்பராயலு அவர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.இவ்விழாவிற்கு சங்க செயல் தலைவர் முனைவர் ராஜா ஆ தலைமை தாங்கினார். சங்க கௌரவத் தலைவர் தமிழ்ச்செம்மல் முனைவர் இரா. சஞ்சீவிராயர் அவர்கள் நான்காவது முறையாக தமிழ்நாடு விவசாய தொழிலாளர் கட்சி, கட்டுமான தொழிலாளர் மத்திய சங்கத்தின் பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட வீ. சுப்பராயலு அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி சந்தன மாலை அணிந்து வாழ்த்து தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில்சங்கத்தின் காப்பாளரும், திருவள்ளுவர்பதின்மபள்ளிதாளாளர்கல்விப்பணித்திலகம் இரா.சேரன் ,ஆட்சி மன்ற குழுத் தலைவர் நல்லாசியர் புலவர் இரத்தின.ஆறுமுகம், விவசாய தொழிலாளர் கட்சி கட்டட தொழிலாளர் மத்திய சங்கத்தின் மாவட்ட செயலாளரும்,அமுதா பெயிண்ட்ஸ் உரிமையாளர் திரு. வெங்கடேசன்,தமிழ்நாடுதனியார் பள்ளிகள் கடலூர் மாவட்ட செயலாளர் C.ராஜமோகனன்,
தமிழ்நாடு தனியார் பள்ளிகள் கடலூர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் S.சைமன் ராஜ்,பெரியவர் ராமசாமி ஐயா, அண்ணாமலை பல்கலைக்கழக நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர். குரு. அற்புதவேல்ராஜா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு நான்காவது முறையாக பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட திரு.வீ.சுப்பராயலு அவர்களுக்கு பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.
கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.




கருத்துகள்
கருத்துரையிடுக