திரு. வி. க நகர்: வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நேரில் சென்று ஆய்வு செய்த அமைச்சர். சேகர்பாபு!!

சென்னை கிழக்கு மாவட்டம், திரு.வி.க நகர் சட்டமன்ற தொகுதி, மண்டலம்-6, 71வது வட்டம், அருந்ததியர் நகரில், இன்று (23.10.2025), வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அவர்கள் நேரில் சென்று ஆய்வு செய்தார்.அப்போது அருந்ததியர் நகரில் உள்ள செங்கன் தெரு , கந்தன் தெரு, வீரராகவன் தெரு, உப்பண்டி பாபு, போலேரி அம்மன் கோயில் தெரு, எலிகன் தெரு, ரங்கப்பன் தெரு உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு செய்து பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.

மேலும் அருந்ததியர் நகரில் அமைந்துள்ள பொதுக் கழிப்பிடம், விளையாட்டு திடல், மாநகராட்சி பள்ளி உள்ளிட்ட இடங்களிலும் ஆய்வு செய்து குறைகளை கேட்டறிந்து மாநகராட்சி அதிகாரிகளிடம் போர்க்கால அடிப்படையில் குறைகளை சரி செய்து தருமாறு அறிவுறுத்தினார். உடன் சென்னை மாநகராட்சி மேயர்.பிரியா, சட்டமன்ற உறுப்பினர். தாயகம்கவி, மாநகராட்சி ஆணையர் உள்ளிட்ட அதிகாரிகள், மண்டலகுழு தலைவர் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் இருந்தனர்.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!