பிள்ளைப்பாக்கம் கிராமத்தில் நடைபெற்ற “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாம்! பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய ஒன்றிய குழு தலைவர்.பெ. வடிவேலு !!
இராணிப் பேட்டை மாவட்டம், நெமிலி ஊராட்சி ஒன்றியம், வேளியநல்லூர் ஊராட்சி - பிள்ளைப்பாக்கம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் “உங்களுடன் ஸ்டாலின்”திட்ட முகாம் நடைபெற்றது.
முகாமிற்கு நெமிலி வட்டார வளர்ச்சி அலுவலர். சிவக்குமார் தலைமை தாங்கினார், வேளியநல்லூர் ஊராட்சி மன்ற தலைவர். அமுதா சண்முகம் முன்னிலை வகித்தார்.
இதில் சிறப்பு அழைப்பாளராக நெமிலி கிழக்கு ஒன்றிய திமுக செயலாளரும் நெமிலி ஒன்றியக் குழு பெருந்தலைவருமான பெ. வடிவேலு அவர்கள் கலந்துகொண்டு முகாமினை பார்வையிட்டு மனுக்கள் மீது தீர்வு காணப்பட்ட, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். முகாமில் வேளியநல்லூர் ஊராட்சியை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு கோரிக்கை மனுக்களை அளித்தனர்.
இந்நிகழ்ச்சியில். SSS தாசில்தார், நெமிலி வடக்கு ஒன்றிய திமுக செயலாளர். மணிவண்ணன், மற்றும் நிர்வாகிகள், அரசுத் துறை அலுவலர்கள், பொதுமக்கள் மற்றும் திமுக கழக நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
ராணிப்பேட்டை மாவட்ட செய்தியாளர் பிரகாசம்.


கருத்துகள்
கருத்துரையிடுக