நெமிலி அருகே சயனபுரம் ஊராட்சியில் நடைபெற்ற "நம்ம ஊரு - நம்ம அரசு”கிராம சபைக் கூட்டம்!!


ராணிப்பேட்டை மாவட்டம்,நெமிலி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட , சயனபுரம் ஊராட்சியில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர். மு.க.ஸ்டாலின் அவர்களின் அறிவுறுத்தலின்படி,ஊராட்சி மன்ற தலைவர். பவானி வடிவேலு அவர்கள் தலைமையில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது.

இந்த கிராம சபைக் கூட்டத்தில் கலந்து கொண்ட பொதுமக்களிடையே மாண்புமிகு. தமிழ்நாடு முதலமைச்சர். மு. க. ஸ்டாலின் அவர்கள் காணொளிக் காட்சி மூலமாக, கிராமப்புறங்களில் வசிக்கும் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த அரசின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும், பல்வேறு நடவடிக்கைகள் குறித்து உரையாற்றினார். மேலும் தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு கிராம மக்களிடம் நேரடியாக கிராமத்தின் வளர்ச்சிக்காக பல்வேறு ஆலோசனைகளை கேட்டறிந்தார்.

இக்கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக, நெமிலி ஒன்றிய பெருந்தலைவர். பெ.வடிவேலு அவர்கள் கலந்து கொண்டு, தமிழ்நாடு அரசின் சார்பில் முன்னெடுக்கப்படும், பொதுமக்களுக்கான பல்வேறு நலத்திட்டங்கள் குறித்து விளக்கினார். குறிப்பாக மகளிர் உரிமைத் தொகை, மாணவர்களுக்கான “நான் முதல்வன்”, “தமிழ்ப் புதல்வன், மகளிர்க்கான “விடியல் பயணத்திட்டம்”,முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான “தாயுமானவர் திட்டம்”, “இல்லம்தேடி கல்வி”, “மக்களைத்தேடி மருத்துவம்”, ஆதரவற்ற குழந்தைகளுக்கான “உதவும் கரங்கள்” போன்ற பல்வேறு திட்டங்கள் குறித்து பொதுமக்களிடையே எடுத்துரைத்தார்.. 

மேலும், சயனபுரம் ஊராட்சியில் நடைபெற்றுள்ள வளர்ச்சிப் பணிகளான, சயனபுரம் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் ரூபாய் 12 இலட்சம் மதிப்பீட்டில் சுற்றுச்சுவர் அமைத்தது, நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ.15 இலட்சம் மதிப்பீட்டில் மேநிலைப் பள்ளிக்கு பேவர்பிளாக் கல் அமைத்தது, பாடசாலைத் தெருவில் சிமெண்ட் சாலை அமைத்தது, சயனபுரம் ஆதிதிராவிடர் பகுதியில் பகுதிநேர நியாயவிலைக் கடை அமைத்து கொடுத்தது, மேலும் இனிவருங்காலங்களில் மேற்கொள்ளப்பட உள்ள பணிகளான, வடகண்டிகை கிராமத்தில் மேநீர்த்தேக்க தொட்டி அமைப்பது, சயனபுரம் முதல் பள்ளூர் வரை செல்லும் இணைப்புச் சாலையை தார் சாலையாக அமைப்பது, சயனபுரம் ஆதிதிராவிடர் பகுதிக்கு செல்லும் சாலையில் சிமெண்ட் சாலை அமைப்பது, ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு புதிய கட்டடம் கட்டுவது போன்ற பல்வேறு பணிகள் குறித்து கிராம சபைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

மேலும், சயனபுரம் ஊராட்சியில் பணிபுரியும் துப்புரவுப் பணியாளர்களுக்கு நலவாரிய உறுப்பினர் அட்டையை ஒன்றிய பெருந்தலைவர்.பெ. வடிவேலு அவர்களும், ஊராட்சி மன்றத் தலைவர். பவானி வடிவேலு அவர்களும் வழங்கினர். 

இக்கூட்டத்தில், ஒன்றிய பணி மேற்பார்வையாளர். ஆறுமுகம், ஊராட்சி மன்ற துணைத் தலைவர். சுகன்யா ரவி, ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், ஊராட்சி செயலாளர். சாரங்கன், கணிப்பொறி இயக்குபவர் லட்சுமிபதி, துப்புரவு பணியாளர்கள் கிராம பொதுமக்கள் என திரளானோர் கலந்து கொண்டு, கிராமத்தின் வளர்ச்சிக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினர்.

ராணிப்பேட்டை மாவட்ட செய்தியாளர் பிரகாசம்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!