மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கை நடவடிக்கையாக வெள்ளப் பாக்கித்தான் வாய்க்கால் தூரம் வரும் பணியை நேரில் சென்று பார்வையிட்ட நகர் மன்ற தலைவர். ஜெயந்தி ராதாகிருஷ்ணன்!!
கடலூர்மாவட்டம்,நெல்லிக்குப்பம் நகராட்சிக்குட்பட்ட வெள்ளப் பாக்கித்தான் வாய்க்கால் தூர்வாரும் பணி மேற்கொள்ள வேண்டும் என கடந்த நகர் மன்ற கூட்டத்தில் உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்தனர்.அதனைத் தொடர்ந்து பருவ மழை முன் எச்சரிக்கை நடவடிக்கையாக வெள்ளப் பாக்கித்தான் வாய்க்காலில் ஆகாயத் தாமரைகளும் கோரைகளும் வளர்ந்து வாய்க்காலை அடைத்துக் கொண்டு இருந்ததால் வாய்க்கால் தூர்வாரும் பணி இன்று நடைபெற்றது.
மேற்படி தூர்வாரும் பணியினை நகர்மன்ற தலைவர். ஜெயந்தி ராதாகிருஷ்ணன் நேரில் பார்வையிட்டார். உடன் துப்புரவு ஆய்வாளர். கேசவன் மற்றும் தூய்மை பணி மேற்பார்வையாளர். சிவக்கொழுந்து,திமுக இளைஞரணி து.செயலாளர். ராஜா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்
கருத்துரையிடுக