டிரான்ஸ்பார்மர் மாற்றி தரக் கோரி கலெக்டருக்கு வழக்கறிஞர் மனு!
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் கனேஷ் நகர் ஏரியில் அமைந்துள்ள டிரான்ஸ்பார்மர் மாற்றி தரக் கோரி மாவட்ட கலெக்டருக்கு அரக்கோணம் வழக்கறிஞர் நா.வரதராஜன் மனுஅனுப்பி உள்ளார்.
அதில் கேட்டுக் கொண்டதாவது; அம்மா அவர்களுக்கு அரக்கோணம் டவுன் ஜோதி நகரில் இருந்து காந்தி நகர் வரையிலான பிரதான சாலையில் கனேஷ் நகர் 12, 13, 14, 15, 16 தெருக்கள் மற்றும் ஜெயம் நகர் 3 வது தெரு உள்ளது 300 குடும்பங்களுக்கு மேல் வசிக்கும் மக்களுக்கான மின்சப்ளை டிரான்ஸ்பார்மர் அரக்கோணம் ஏரியின் நடுவில் முட்புதரில் அமைந்து உள்ளது. இங்கு சாதாரண நாட்களில் அடிக்கடி டிரான்ஸ்பார்மர் பழுதடைந்து விடுகிறது அதே நேரத்தில் மழை காலங்களில் இதன் தொல்லை சொல்லமாலாது இந்த நிலையில் தற்போதைய வடகிழக்கு மழையால் முற்றிலுமாக மின்சாரம் துண்டித்து ஐந்து நாட்கள் ஆகிவிட்டது. ஆகவே, டிரான்ஸ்பார்மரை பிரதான சாலையில் மாற்று அமைத்துதர உத்தரவு வழங்குமாறு மக்கள் சார்பாக கோரிக்கை வைக்கிறேன் இவ்வாறு வழக்கறிஞர். வரதராஜன் கேட்டுக்கொண்டார்.
அரக்கோணம் செய்தியாளர் ரவி

கருத்துகள்
கருத்துரையிடுக