பல்லடம்: சிறிய அளவிலான ஜவுளி பூங்கா அமைச்சர்கள் திறந்து வைப்பு!!
திருப்பூர்மாவட்டம்,மாண்புமிகு கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர். ஆர்.காந்தி, மாண்புமிகு மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர். என்.கயல்விழி செல்வராஜ் ஆகியோர் முன்னிலையில் திருப்பூர் மாவட்டம், பல்லடம் ஊராட்சி ஒன்றியம், சுக்கம்பாளையத்தில் சிறிய அளவிலான ஜவுளி பூங்கா திட்டத்தின் கீழ் கார்த்திகேயா வீவிங் பார்க் ஜவுளி பூங்காவினை தமிழ் வளர்ச்சி செய்தி விளம்பரத்துறை அமைச்சர். மு. பெ. சாமிநாதன் அவர்கள் திறந்து வைத்து பார்வையிட்டனர்.
உடன் அரசு செயலாளர். (கைத்தறி, கைத்திறன், துணிநூல் மற்றும் கதர்த்துறை) வி.அமுதவல்லி இ.ஆ.ப., அவர்கள், இயக்குநர். (துணிநூல் துறை) இரா.லலிதா இ.ஆ.ப., அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர். மனிஷ் நாரணவரே இ.ஆ.ப., அவர்கள், மண்டல துணை இயக்குநர். (துணிநூல் துறை) செ.தமிழ்செல்வி, அரசு அலுவலர்கள் மற்றும் திமுக கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
திருப்பூர் மாவட்ட செய்தியாளர் அருண் ராஜ்.




கருத்துகள்
கருத்துரையிடுக