சாலை ஆய்வில் ஈடுபடும் சேர்மன், கமிஷனருக்கு தமிழ் படைப்பாளர்கள் சங்கத்தினர் பாராட்டு!
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் 16வது நகரமன்ற தலைவர் வார்டு சுப்புராயன் வீதியில் பேயர் பிளாக் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. ரூபாய் 6 .30 லட்சம் நமக்கு நாமே திட்டத்தில் நடைபெறும் பணிகளை நகர மன்ற தலைவர். லட்சுமி பாரி, கமிஷனர். ஆனந்தன் ஆய்வு செய்தனர். அப்பொழுது அங்கு வந்த இராணிபேட்டை மாவட்ட தமிழ் படைப்பாளர்கள் சங்க நிர்வாகிகள் கௌரவத் தலைவர். ஆர் வெங்கட்டரமணன், பொதுச் செயலாளர். சுந்தர்ராஜ், பொருளாளர் கே பி கே பிரபாகரன் ஆகியோர் நகர மன்ற தலைவர். லட்சுமி பாரி, கமிஷனர் ஆனந்தனை சந்தித்தனர். மேலும் சிறப்பாக பணியாற்றி வருவதாக கூறி இருவருக்கு சால்வை அணிவித்து பாராட்டு தெரிவித்தனர். நமக்கு நாமே திட்டத்தின் பணிக்கு திமுக வட்டச் செயலாளர். பாரி ரூபாய் 2 லட்சம் பங்களிப்பு அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆய்வின் போது ஓவர்சியர். பிரேம் சுந்தர், ஒப்பந்ததாரர். பத்மநாபன் உடன் இருந்தனர்.
அரக்கோணம் செய்தியாளர் ரவி

கருத்துகள்
கருத்துரையிடுக