ஒடுக்கப்பட்டோர் வரலாறு பற்றிய கருத்தரங்கம்!!

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டம், முத்துக்கடை-அம்மூர் சாலையில் உள்ள  தனியார் மண்டபத்தில் ஒடுக்கப்பட்ட மக்களின் மறுக்கப்பட்ட மற்றும் மறைக்கப்பட்ட வரலாற்றை அண்ணல் அம்பேத்கர் வழியில் நாம் யார்' என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது.


இந்தக் கருத்தரங்கில், புற்றுநோய் அறுவைசிகிச்சை நிபுணர் மற்றும் ஆராய்ச்சியாளரான அர்ஷமித்ரா உரிமையாளர் மற்றும் தலைமை மருத்துவர் டாக்டர். ஜி.ஜி. ராஜ்வர்தனன்  வரலாற்றுப் பேருரை ஆற்றினார்.

மேலும், இக்கருத்தரங்கில் அரசுப் பள்ளிகளில் பயின்று 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் முதல் மற்றும் இரண்டாம் மதிப்பெண்கள் பெற்ற மாணவ-மாணவிகளுக்குப் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்வுக்கு, SC/ST கூட்டமைப்பு, ராணிப்பேட்டை மாவட்ட காப்பாளர்.  டி. மோகன்தாஸ் தலைமை தாங்கினார். SC/ST கூட்டமைப்பு, ராணிப்பேட்டை மாவட்ட பொருளாளர்  கே.பி.எஸ். மலையராஜன் ஆதிதிராவிடன்  வரவேற்புரை வழங்கினார். SC/ST கூட்டமைப்பு, ராணிப்பேட்டை மாவட்ட பொறுப்பாளர். குரு. விமல்குமார் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார்.

புத்த வந்தனத்தை BHEL-இன் மேனாள் தலைவர். பெளத்த ஜி. பாலாஜி  நிகழ்த்தினார். வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி RMO மருத்துவர் டி. இரவிச்சந்திரன் நோக்கவுரை வழங்கினார். AGM/BHEL மற்றும் நர்ச்சர் செயலாளர்.  ஏ. சிவானந்தன்  அறிமுகவுரையாற்றினார். முடிவில், அமைப்புச் செயலாளர் டி. நித்தியானந்தம் நன்றி கூறினார்.

இந்தக் கருத்தரங்கில் அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் திரளானோர் கலந்துகொண்டனர்.

ஆர்காடு செய்தியாளர் ஆனந்த்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!