அரக்கோணம் சிஎஸ்ஐ சென்ட்ரல் பள்ளியில் நடைபெற்ற ஐம்பெரும் விழா!!

ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் பழைய பேருந்து நிலையம் அருகில்  சிஎஸ்ஐ சென்ட்ரல் பள்ளி உள்ளது. இங்கு நடந்த பள்ளி ஐம்பெரும் விழாவிற்கு வந்தவர்களை   தலைமை ஆசிரியர். ராபர்ட்  வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக சிஎஸ்ஐ சென்னை பேராயர். பால் பிரான்சிஸ் ரவி சந்திரன் கலந்து கொண்டார். அவர் பேசிய போது பள்ளி ஆசிரியர்களை நம்பி பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை அனுப்புவதாகவும் ஆகவே பிள்ளைகளுக்கு சிறப்பாக கல்வி கற்றுக் கொடுக்க வேண்டும் அதைக்  காட்டிலும்  ஒழுக்கத்தை கற்றுக் கொடுக்க வேண்டும் இது ஒவ்வொரு ஆசிரியருடைய கடமை மேலும், கல்வி மட்டும் கற்றுக் கொடுப்பதுடன் நிறுத்தி விடாமல் அவர்கள் சமுதாயத்தில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதையும் கண்டிப்பாக கற்றுக் கொடுக்க வேண்டும் எனவே,,முதல் கட்டமாக அனைத்து சிஎஸ்ஐ பள்ளிகளுக்கும் சுமார் ஒரு லட்சம் மதிப்புவுடைய ஸ்மார்ட் கிளாஸ் டிஜிட்டல் பேனல் வழங்கப்பட இருக்கிறது எனவும் கூறினார். 

பேராயத்தின் உப தலைவர். ஜெயசீலன் வாழ்த்தி பேசினார்.   பின்னர் பள்ளி தாளாளர், பேராயர்களுக்கு சிறப்பு பரிசு வழங்கபட்டது.  இறுதியில் பள்ளி உதவி தலைமை ஆசிரியர். வில்சன் அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.

அரக்கோணம் செய்தியாளர் ரவி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!