அரக்கோணத்தில் நடைபெற்ற மத்திய ஒன்றிய திமுக செயல் வீரர் கூட்டம் !!
ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் மத்திய திமுக ஒன்றிய செயல் வீரர்கள் கூட்டம் திருத்தணி சாலையில் தனியார் மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றிய செயலாளர். பசுபதி தலைமை தாங்கினார். துணை செயலாளர். அன்பழகன் வரவேற்றார். நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக தொகுதி பொறுப்பாளர். சூர்யா வெற்றி கொண்டான் கலந்து கொண்டார். அவர் பேசியபோது வருகின்ற 2026 தேர்தலில் அரக்கோணம் தொகுதி நமக்கு தான் ஒதுக்கப்படுகிறது. ஆகவே வெற்றி பெற்றாக வேண்டும் இதற்காக ஒவ்வொருவரும் கடுமையாக பணியாற்ற வேண்டும் என கேட்டுக் கொண்டார் பின்னர் . கிளை செயலாளர்கள், பிரதிநிதிகள், வாக்குச்சாவடி முகவர்கள் என 500-க்கும் மேற்பட்டோருக்கு தீபாவளி பரிசுகளை வழங்கினார். கூட்டத்தில் மாவட்ட அவை தலைவர் ஏகே சுந்தரமூர்த்தி பொது குழு உறுப்பினர். கண்ணையன் துணை சேர்மன். புருஷோத்தமன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் முடிவில் ஒன்றிய பொருளாளர். டில்லி பாபு அனைவருக்கும் நன்றி கூறினார்.
அரக்கோணம் செய்தியாளர் ரவி.

கருத்துகள்
கருத்துரையிடுக