உலக போலியோ தினம் முன்னிட்டு அரக்கோணம் ரோட்டரி சங்கம் சார்பில் மனித சங்கலி விழிப்புணர்வு பேரணி!
ராணிப்பேட்டை மாவட்டம் பன்னாட்டு ரோட்டரி சங்கம் சார்பில் உலகம் முழுவதும் போலியோ ஒழிப்பு தினம் அனுசரிக்கப்படுகிறது. அதன் ஒரு பகுதியாக அரக்கோணம் நகரில் வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் அரக்கோணம் பன்னாட்டு ரோட்டரி சங்கம் சார்பில் மனித சங்கிலி மற்றும் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. ரோட்டரி சங்கத்தின் அரக்கோணம் தலைவர். மனோகர் பிரபு தலைமை தாங்கினார். செயலாளர். லட்சுமிபதி வரவேற்றார். போலியோ ஒழிப்பு தலைவர். ரோட்டேரியன் ஆர். வெங்கட்டரமணன் முன்னிலை வகித்தார். இதில் சிறப்பு அழைப்பாளராக மூத்த தலைவர். மணி நாயுடு கலந்து கொண்டு பேரணி தொடங்கி வைத்தார். சிறப்பு விருந்தினராக மக்கள் தொடர்பு சேர்மன் கே பி கே பிரபாகரன் கலந்து கொண்டு மனித சங்கிலி தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் முன்னாள் தலைவர். மணிகண்டன் மற்றும் பிரதீப் வெங்கட் உள்ளிட்ட தூய்மை பணியாளர்கள் பலரும் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் அரக்கோணம் சங்கம் சார்பில் 100 டாலர் தொகையை போலியோ ஒழிப்புக்காக பன்னாட்டு ரோட்டரி சங்கத்திற்கு வழங்கிய போலியோ ஒழிப்பு தலைவர். ரோட்டேரியன் ஆர். வெங்கட்டரமணனுக்கு அரக்கோணம் ரோட்டரி சங்கத்தின் சார்பாக பாராட்டும் வாழ்த்துக்களும் தெரிவிக்கபட்டது.
அரக்கோணம் செய்தியாளர் ரவி


கருத்துகள்
கருத்துரையிடுக