சத்தியமங்கலம் ஊராட்சியில் பா.ம.க.மாநில தலைவர் அன்புமணி ராமதாஸ் பிறந்தநாள் விழா !!
வேலூர் மாவட்டம், அணைக்கட்டு தாலுகா, சத்தியமங்கலம் மற்றும் பொய்கை ஆகிய ஊராட்சிகளின், பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் பாட்டாளி மக்கள் கட்சியின் மாநிலத் தலைவர். அன்புமணி ராமதாஸ், 57ம் பிறந்தநாள் தினத்தை முன்னிட்டு சத்தியமங்கலம் மற்றும் பொய்கை ஊராட்சியிகளில் பிறந்தநாள் விழா நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு வேலூர் மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சியின் துணைத் தலைவரும், சத்தியமங்கலம் ஊராட்சி மன்ற தலைவருமான இளங்கோவன், ஒன்றிய செயலாளர். சிவா, ஆகியோர் தலைமையில் கொண்டாடப்பட்டது. இதில் சிறப்பு அழைப்பாளர்களாக வேலூர் கிழக்கு மாவட்ட தலைவர். பி.கே.வெங்கடேசன், மாவட்ட செயலாளர். ஜெகன் ஆகியோர் கலந்துகொண்டு, கேக் வெட்டி, பட்டாசுள் வெடித்தும் பொது மக்களுக்கு இனிப்புகள், இலவச வேட்டி, சேலை நலதிட்ட உதவிகள் மற்றும் அன்னதானம் வழங்கினர். இந்நிகழ்ச்சியில் வேலூர் மாநகராட்சி மாமன்ற உறுப்பினர். பாபி கதிரவன், மாநகர இளைஞரணி செயலாளர். சரவணன், ஊராட்சி மன்ற துணைத் தலைவர். ரேணு, மனதைக் கவரும் சிறந்த பேச்சாளரும், மாவட்ட அமைப்பு செயலாளருமான அக்னி வேல்முருகன், மாவட்ட தேர்தல் பணிக்குழு செயலாளரும், தொழிலதிபருமான செங்குட்டுவன், மோகன்ராஜ், T.M.K .மோகன், சமூகநீதி பேரவை வழக்கறிஞர். சந்துரு, மஞ்சுநாதன், ஒன்றிய செயலாளர். சதீஷ் உள்ளிட்ட பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்ட்ட ஒன்றிய நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் என பலர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர். இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைத்து பாட்டாளி மக்கள் கட்சி நிர்வாகிகளுக்கு சத்தியமங்கலம் ஊராட்சி மன்ற தலைவர். இளங்கோவன், கட்சியின் துண்டு அணிவித்து கௌரவிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
வேலூர் செய்தியாளர் சிவகுமார்.

கருத்துகள்
கருத்துரையிடுக