மேலபுலம் கிராமத்தில் நடைபெற்ற "உங்களுடன் ஸ்டாலின்" திட்ட முகாம்! பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிய நெமிலி மத்திய ஒன்றிய செயலாளர் எஸ்.ஜி.சி பெருமாள்!!
ராணிப்பேட்டை மாவட்டம் கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி அவர்களின் வழிகாட்டுதலில் நெமிலி ஊராட்சி ஒன்றியம் மேலப்புலம் ஊராட்சியில் "உங்களுடன் ஸ்டாலின்" திட்ட முகாம் ஊராட்சி மன்ற தலைவர். அனிதா நாராயணன் அவர்கள் தலைமையில் நடைப்பெற்றது.
இதில் அனைத்து அரசு துறைகளும் மக்கள் பயன்பாட்டில் கொண்டு நடைப்பெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளர்களாக நெமிலி தெற்கு ஒன்றிய செயலாளர் ஆர்.பி ரவீந்திரன், நெமிலி மத்திய ஒன்றிய செயலாளர் எஸ்.ஜி.சி பெருமாள் அவர்கள் கலந்துகொண்டு முகாமினை பார்வையிட்டு, மனுக்கள் மீது தீர்வு காணப்பட்ட பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். முகாமில் மேலபுலம் ஊராட்சியை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு கோரிக்கை மனுக்களை அளித்தனர்.
இதில் நெமிலி வடக்கு ஒன்றிய செயலாளர். மணிவண்ணன், நெமிலி தெற்கு ஒன்றிய அவைத்தலைவர். பிரகாஷ், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் V. S. முரளி, பொருளாளர். மகேந்திரவாடி செல்வம், மாவட்ட பிரதிநிதி V. M. பார்த்திபன், வடக்கு ஒன்றிய அவைத்தலைவர். பொன்னுரங்கம், துணைச் செயலாளர். கீழ்வீதி சம்பத்து, நிர்வாகிகள். C. சம்பத், மனோகரன், ஐடி விங் ஜெகதீசன், யுவராஜ், ப்ரீத்தம், ஸ்டாலின், கனகா ராஜேந்திரன், பிரியா, மேலபுலம் ஊராட்சி கிளை செயலாளர். விஜயன் சத்தியசீலன், துரை, ராஜமாணிக்கம், V. P. பிரகாஷ், லிங்கநாதன் சரவணன் , திமுக கழக நிர்வாகிகள் மற்றும் பொது மக்கள் இதில் கலந்துக்கொண்டனர்.
ராணிப்பேட்டை மாவட்ட செய்தியாளர் மு. பிரகாசம்



கருத்துகள்
கருத்துரையிடுக