திமிரி சஞ்சீவிராயன் பேட்டையில் ஆபத்தான பொதுக் கிணற்றை சீரமைக்கக் கோரி பொதுமக்கள் சாலை மறியல்!


ராணிப்பேட்டை மாவட்டம் திமிரி சஞ்சீவிராயன் பேட்டை மீனவர் குடியிருப்புப் பகுதியில் உள்ள பொதுக் கிணறு பழுதடைந்து ஆபத்தான நிலையில் உள்ளது. இதனால் அப்பகுதி மக்கள், குறிப்பாக குழந்தைகள் மற்றும் முதியவர்கள், மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். கிணற்றின் சுற்றுச்சுவர்கள் இடிந்து விழும் நிலையில் இருப்பதால், அருகில் செல்லவே அச்சமாக உள்ளது என மக்கள் தெரிவித்தனர்.

இதுகுறித்து பலமுறை அதிகாரிகளிடம் மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால், நேற்று பொதுமக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து வந்த திமிரி போலீசார் மற்றும் நகராட்சி, வருவாய்த் துறை அதிகாரிகள் பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்ததை அடுத்து, பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த மறியலால் அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

ஆற்காடு செய்தியாளர் ஆனந்த் 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!