குறிஞ்சி சிட்கோ தொழில் பேட்டையில் தங்க நகை பூங்கா பணிகளுக்கு அடிக்கல் நாட்டிய தமிழக முதல்வர்!!
கோவை மாவட்டம், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர். மு. க. ஸ்டாலின் அவர்கள் தமிழ்நாடு சிறுதொழில் வளர்ச்சி நிறுவனத்தின் சார்பில், கோயம்புத்தூர், குறிச்சி சிட்கோ தொழிற்பேட்டையில் 126.12 கோடி ரூபாய் மொத்த திட்ட மதிப்பீட்டில், முதற்கட்டமாக 81.40 கோடி ரூபாய் மதிப்பில், ஐந்து தளங்களுடன் அமைக்கப்படவுள்ள தங்கநகை பூங்கா பணிகளுக்கு தமிழக முதல்வர் அடிக்கல் நாட்டினார்..
இதில் அமைச்சர். எ.வ. வேலு முன்னாள் அமைச்சர். செந்தில் பாலாஜி மற்றும் அமைச்சர்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆகியோர் உடன் இருந்தனர்.
கோவை மாவட்ட செய்தியாளர் சக்திவேல்.


கருத்துகள்
கருத்துரையிடுக