குடியாத்தம் : பிறந்தநாள் கேக் வாங்கியவருக்கு அதிர்ச்சி!!

வேலூர் மாவட்டம், குடியாத்தம் ஊராட்சி ஒன்றியம்,உள்ளி வருவாய் கிராமம் மற்றும் ஊராட்சி உள்ளி மாதணூர் நெடுஞ்சாலையில் பாலாறு பாலம் அருகே உள்ள ஆறுமுகம் ஐயங்கார் பேக்கரியில் வளத்தூர் அடுத்த ராசம்பட்டி பகுதியைச் சேர்ந்த  ராஜேஷ் என்பவர் தன்னுடைய உறவினர்கள் இருவரின்  பிறந்த நாள் விழாவுக்காக இரண்டு கேக் ஆர்டர் கொடுத்து 02/10/2025 இன்று முற்பகல் 11.00 மணியளவில் கேக் வாங்கி சென்று பிறந்த நாள் விழாவில் கேக் பிரித்தபோது கேக்கில் சிறுசிறு புழுக்கல் ஆதிக அளவில் காணப்பட்டதால் அதிர்ச்சி அடைந்தனர்.

பாதிக்கப்பட்ட நபர் தனது உறவினர் மற்றும் நண்பர்கள் உடன் சென்று பேக்கரியில் கேட்டபோது கடை ஊழியர்கள் புழக்கல் இருந்த கேக்கினை பறித்து எரியும் அடுப்பில் போட்டு எரித்து விட்டனர். கெட்டுப்போன உணவு பொருட்கள் சாப்பிட்டு பொதுமக்கள் பாதிப்படையும் நிலையில் மேற்காணும் பேக்கரி செயல்படுவதால்  இது சம்பந்தமாக உணவு பாதுகாப்பு துறையினர் மேற்கண்ட கடையினை ஆய்வு செய்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கேவி ராஜேந்திரன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!