பண்ருட்டி பேருந்து நிலையத்தில் காவல்துறை சார்பில் பயணிகளுக்கு சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர் பிரச்சாரம்!!
கடலூர் மாவட்டம், கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவின் பேரில், பண்ருட்டி உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் மற்றும் பண்ருட்டி போக்குவரத்து காவல் ஆய்வாளர். பரமேஸ்வர பத்மநாபன் அவர்களின் வழிகாட்டுதலின்பேரில், போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர். தேவநாதன் அவர்கள் பண்ருட்டி நகரப் பகுதிகளில் மற்றும் பண்ருட்டி பேருந்து நிலையங்களில் சாலை பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
பேருந்து நிலையத்தின் பேருந்திற்காக காத்திருக்கும் பயணிகளிடையே சாலை பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தியும் கூட்டம் அதிகமாக இருக்கும் பேருந்துகளில் தங்கள் உடமைகளை பாதுகாப்பாக எடுத்துச் செல்லும் வழிமுறைகளை கூறியும்,மேலும் தங்களது குடும்பத்தினர் இருசக்கர வாகனம் ஓட்டும்போது கண்டிப்பாக தலைக்கவசம் அணிந்து செல்லவும் அறிவுறுத்தினார்.
கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.



கருத்துகள்
கருத்துரையிடுக